இசை நிகழ்ச்சியில் இளைஞர் குத்திக் கொலை

பாணந்துறை பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை பழம் வெட்டும் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, பரத்த வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இசை நிகழ்ச்சியொன்றில் இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்தமையே இந்த கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்