முன்னாள் ஆளுநர் கப்ராலுக்கு மேலும் ஒரு தடை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல மேலும் ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், ஜூன் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கப்ராலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதுடன், கப்ரால் தனது கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.