ஆலங்கட்டி மழை: நடு வானில் சேதமடைந்த விமானம்

ஆஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையினால் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த விமானம் ஸ்பெயினிலிருந்து ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது. இதன்போது விமானம் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் சிக்கியுள்ளது.

இதனால் விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, ஜன்னல்களும் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சேதத்தை பொருட்படுத்தாமல் பயணித்த விமானம் வியன்னாவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்