ஆரம்ப பாடசாலை மீது தாக்குதல் : நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களுக்கு காயம்

காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை மீது இஸ்ரேல் ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.