அவுஸ்திரேலியா சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்றுவதற்காக இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.

இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தில் இணைந்துள்ள ஜனாதிபதி, இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அங்கு ஆராயவுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்