அறுவை சிகிச்சையால் காப்பற்றப்பட்ட மலைப்பாம்பு

பர்மிய மலைப்பாம்பு உலகின் மிகப்பெரிய பாம்பு வகைகளில் ஒன்றாக இருந்தாலும் IUCN சிவப்புப் பட்டியலின்படி ‘பாதிக்கப்படக்கூடியது’ என பட்டியலிடப்பட்டுள்ளது.

பெண் பர்மிய பாம்பான இதற்கு உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக அதற்கு பசியின்மை ஏற்பட்டதால் எதையும் சாப்பிடாமல் உடல் எடை குறைந்து கொண்டே வந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனை பார்வையிட்ட வைத்தியர்கள் பாம்புக்கு வயிற்றில் பெரிய கட்டி அல்லது ஏதேனும் ஒரு பொருள் சிக்கியிருக்கலாம் என்று கருதியிருந்தனர். சர்வதேச தரத்தில் இந்த பர்மிய பாம்புக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இறுதியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.

சத்திர சிகிச்சை மேற்கொண்டதில் 4.5 கிலோ எடை கொண்ட 3 அடி உயரம் உடையதாக கட்டி ஒன்று வயிற்றில் இருந்து பிரித்தொடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர், வெளிப்புறத்தில் வைத்தியர்கள் தையல் இட்டு சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்