அரிய வகை சுறா மீனுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

புத்தளம் மாவட்ட கடற்றொழில் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, அழிந்துவரும் விலங்குகளின் குழுவைச் சேர்ந்த, கொல்லப்பட்ட சுறா மீனுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி கண்டகுழி பகுதியில் வாடி ஒன்றில் இவ்வாறு அரிகிவரும் சுறா மீன்களை விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட கடற்றொழில் நீரியவளத்துறை திணைக்களத்தினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுறிவளைப்பின்போது ரெஜிபோர்ம் பெட்டியினுள் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 40 கிலோ கிராம் சுறா மீன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஒரு கிலோகிராம் 1000/= 1500/= விற்கு விற்கப்படுவதாக சந்தேக நபர்கள் தெரிவித்ததாக புத்தளம் மாவட்ட கடற்றொழில் நீரியவளத்துறை திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இதன்போது புத்தளம் மாவட்ட கடற்றொழில் நீரியவளத்துறை திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்