அமைச்சர் நஷீர் அஹமட்டிற்கு இரத்தக்குழாய்களில் ஏற்ப்பட்டுள்ள அடைப்பு: இந்தியாவில் சிகிச்சை

சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஷீர் அஹமட் தனது வழமையான மருத்துவ பரிசோதனையினை மேற்கொண்டிருந்த வேளை இதயக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு வைத்தியர்களால் கண்டறியப்பட்டு உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளுமாறு வழங்கப்பட்ட வைத்திய ஆலோசனைக்கு அமைவாக, இந்தியா சென்ற அமைச்சர் சென்னையில் உள்ள அப்பலோ தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையினை தொடர்ந்து வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்