அமைச்சரின் செயலாளர் வீட்டில் சோதனை : 30 கோடி ரூபாய் பறிமுதல்!

இந்தியாவின் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை நடத்திய சோதனையில்  30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் அலம்கீர் ஆலனின் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சரின் தனிச்செயலாளர்களின் வீடுகளிலும் அமுலாக்கத்துறையினர் முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது அமைச்சரின் செயலாளர் ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்படடிருந்த பெருமளவிலான பணத்தினை அமுலாக்கத்துறையினர் மீட்டுள்ளனர்.

அதன் பெறுமதி சுமார் 20 கோடி ரூபாய் எனவும் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த அமைச்சரின் மற்றொரு செயலாளர் ஒருவரின் வீட்டில 10 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஜார்கண்டில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்