அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமைக்கப்படுகிறது கூட்டணி

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, ஜே.பி. நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங், தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரான நிதிஷ்குமார், ஜன சேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரான குமாரசாமி, சிவசேனா (ஷிண்டே பிரிவு) தலைவரான ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான சிராக் பஸ்வான் உள்ளிட்ட பலர் பங்கு பற்றினர்.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் சார்பில் முக்கியமான துறைகளுக்கான அமைச்சர் பொறுப்பு தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அத்துடன் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் மட்டுமில்லாமல் மதசார்பற்ற ஜனதா தளம், சிவசேனா (ஷிண்டே பிரிவு ), ஜனசேனா ஆகிய கட்சிகளும் தங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது, எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்