
அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இலங்கை தயாராக உள்ளது
வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும் இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகம் வெயிட்டுள்ள ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், இலங்கை ஏற்றுமதிகள் மீது 44சதவீதம் அமெரிக்க வரி விதிக்கப்படுவது குறித்த தனது கவலைகளை எடுத்துரைத்துள்ளது, இது ஆண்டுதோறும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் எனவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மார்ச் 2023 முதல் தற்போது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (IMF) கீழ் உள்ள இலங்கை, அதன் பொருளாதார மீட்சி மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் அமெரிக்காவின் ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. பொருளாதாரம் நிலைபெற்று 2024 ஆம் ஆண்டில் 5சதவீதம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது முன்னேற்றத்தை பாதிக்கலாம் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக தடைகளை குறைப்பதற்கும், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் இலங்கையின் உறுதிப்பாட்டையும் இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டியது, அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும்வகையில் இந்த அறிகுஇகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.