அட்சய திருதியை தினத்தில் நகைக்கடைக்கு நேர்ந்த கதி

கொழும்பு ஹோமாகம நகரிலுள்ள நகை விற்பனை நிலையமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நால்வர் துப்பாக்கியைக் காட்டி கொள்ளையிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 இலட்சம் ரூபா ரொக்கப் பணம் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 36 மோதிரங்கள் மற்றும் 48 பென்டன்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் சந்தேகநபர்கள் போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஹோமாகம பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அட்சய திருதியை தினத்தில் நகைக்கடைக்கு நேர்ந்த கதி

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்