அசிட் தாக்குதலில் பெண் உயிரிழப்பு

அம்பலாங்கொடையில் இன்று திங்கட்கிழமை பெண் மீது அசிட் தாக்குதல் நடாத்தப்பட்டதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அம்பலாங்கொடை பகுதியை சேரந்த பிரேமலதா என்ற 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வீட்டின் சமையல் அறையில் உணவு தயாரித்துக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரொருவர் இவர் மீது அசிட் வீசியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதன்போது, காயமடைந்தவர் அயல் வீட்டாளர்களின் உதவியுடன் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்