🔆முல்லைத்தீவு முல்லியாவைச் சேர்ந்தவர் அகிலதிருநாயகி. தனது 75ஆவது வயதில் ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் இலங்கைக்காக இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுத் தந்தார்.
🔆பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில், 1500 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கங்களையும், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தையும், 5000 மீட்டர் நடைப் பந்தயத்தில் தகுதி விருதையும் வென்று சாதனையினை நிலைநாட்டி இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
🔆36 ஆண்டுகள் சிறை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய திருநாகி, சிறைத்துறை நடத்திய பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
🔆தான் சிறுவயதில் இருந்தே விளையாட்டில் சிறந்து விளங்குவதாகவும், பாதணிகள் அணிந்து போட்டியில் பங்கேற்பது கடினம் என்பதால், பாதணிஅணிந்து எந்த போட்டியிலும் பங்கேற்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் மற்றும் அவர் சைவ உணவு மட்டுமே உண்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
🔆வயது வந்தோருக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இலங்கைக்காக பதக்கம் வெல்வதே அகிலதிருநாயகியின் நம்பிக்கையாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்