ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் துரிதமாக அதிகரித்த எச்.ஐ.வி தொற்று
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இவ்வருடம் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் துரித அதிகரிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்ட பால்வினை நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி ஒருவர் அம்பலாங்கொடை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மருத்துவ சிகிச்சை முகாமின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
மாவட்டத்தில் இவ்வருடம் 21 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இன்னும் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் இருக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மொத்தமாக 87 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், இன்னும் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
எச்.ஐ.வி ஒரு குணப்படுத்த இயலாத நோயல்ல என்றும், அது எய்ட்ஸ் நிலைக்கு வளரும் முன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியும் என்றும் வைத்திய அதிகாரி மேலும் கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்