ஸ்ரீ ஆஞ்சநேய ஜனனதின உற்சவம்

-யாழ் நிருபர்-

வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் ஸ்ரீ ஆஞ்சநேய ஜனனதின உற்சவம் இன்று திங்கட்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ வேங்கட வரதாஜப்பெருமாள், சீதேவி, பூமாதேவி ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தீபாராதனைகள், 108 மாந்திர அர்ச்சனைகள் இடம்பெற்று நைவேத்தியங்களும் படைக்கப்பட்டன.

இவ் கிரியைகளை ஆலயபிரதம குரு சிவஸ்ரீ செ.ரமணிதரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்தனர். இதில் பல பகாங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்