வெள்ளம் காரணமாக உறவினர் வீட்டில் தங்கியிருந்த பெண் மரணம்

-மன்னார் நிருபர்-

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவை யின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி இன்று அதிகாலை 4.30 மணியளவில் பயணித்த புகையிரதத்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக் காட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24