வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்கள்: மக்கள் கவலை
-கிண்ணியா நிருபர்-
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோலை வெட்டுவான், மயிலப்பஞ்சேனை, கண்டக்காடு முதலான பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை மழை வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கி அழிந்து விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இப்பகுதிகளில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இங்கு செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகளை விட புல் அதிகமாக காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விவசாயத்தை நம்பி வாழும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு அரசாங்கம் இதற்கான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்