வெசாக் தோரணைகளுக்கு அதிக கேள்வி

இந்த வருடம் வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு தோரணைகள் அமைப்பதற்கு அதிக கேள்வி நிலவும் எனவும் இதன் மூலம் அதிக செலவை ஏற்க நேரிடும் என தோரணை நிர்மாணிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 2018ம் ஆண்டுக்கு பின்னர் இந்த வருடமே விசாக தோரணைக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்பட்டுள்ள கேள்விக்கு, செலவுடன் கூடிய நிரம்பலை வழங்க முடியாதுள்ளது, எமது நாட்டில் மாத்திரம் உள்ள இந்த விசாக தோரணை கலையை அனைவரும் பார்வையிட்டு ஆதரவு வழங்க வேண்டும் என தோரணை நிர்மாணிப்பாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு எந்த வகையான அன்னதானம் நடத்தப்படும், எத்தனை நாட்கள் நடத்தப்படும், நடைபெறும் இடங்கள், சுற்றுச்சூழலின் தன்மை போன்றவற்றைக் குறிப்பிடும் கடிதத்தை வழங்கினால் அப்பகுதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் பதிவினை பெற்றுக்கொள்ள முடியும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகள் என்பனவற்றை பரிசோதிக்கும் பணி அன்னதானம் (தன்செல்) நடைபெறுவதற்கு முன்னர் இடம்பெறும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்