வீதியின் குறுக்கே முறிந்து விழுந்த மரமும், மின்கம்பமும் : போக்குவரத்து தடை!
-பதுளை நிருபர்-
பதுளை கப்பெட்டிபொல வீதிக்கு அருகாமையில் உள்ள தென்னை மரமொன்று வீதியின் குறுக்கே இருந்த மின் கம்பத்தின் மீது முறிந்து விழுந்துள்ளது.
இதனால் மின் கம்பம் முறிந்து வீதியில் வீழ்ந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
பதுளை மாநகரசபை தீயணைப்புத் திணைக்களம், மின்சார சபை மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து வீதியை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்