வீடொன்றில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் திருட்டு

-யாழ் நிருபர்-

உரும்பிராயிலுள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள்  களவாடப்பட்டுள்ளன.

 

வீட்டிலுள்ளோர் நேற்றுமுன்தினம் காலை வீட்டை விட்டு வெளியேறி  பிற்பகல் வீடு திரும்பியுள்ளனர். இதன்போது வீட்டின் கூரை பிரிக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். வீட்டினுள் சென்று பார்த்த போது 900 யூரோ காசுத்தாள்கள், ஒன்றரை இலட்சம் ரூபா பணம் மற்றும் 4 பவுண் தங்க நகை என்பன திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

திருட்டு தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்