வாழைச்சேனையில் 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு(புகைப்படம்)

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 119 மைக்கல் பிரதேசத்துக்கு உட்பட்ட மியான்குள காட்டுப் பாதையில் இன்று திங்கட்கிழமை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

வட்டவானை சேர்ந்த ஜீவரெட்டினம் சுலோசன் (வயது – 19) என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

மரணத்துக்கான காரணத்தை கண்டறிய சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்