வற் அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படப்போகின்றார்கள்
-யாழ் நிருபர்-
ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றார்கள் என சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் மயூரன் தெரிவித்தார்.
அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
புத்தகங்கள் கொப்பிகள் கற்றல் உபகரணங்களுக்கு 18 வீதம் முழுமையாக வரி அதிகரிப்பட்டுள்ளதனால் பெற்றோர் பெருமளவில் பாதிக்கப்பட போகின்றார்கள். ஜனவரி முதல் நாளே வர்த்தக நிலையங்களில் வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வந்து விட்டது. இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை உபகரணங்களுக்கு வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்