வட்ஸ்அப்பில் வரும் தேவையற்ற அழைப்புக்களை கட்டுப்படுத்த புதிய அப்டேட்!

வட்ஸ்அப் தளத்தில் பயனர்கள், தெரியாத நபர்களிடமிருந்து தங்களுக்கு வரும் அழைப்புகளை சத்தமின்றி சைலண்ட் மோடில் வைக்கும்  சைலன்ஸ் அன்னௌவ் கோலர்ஸ் என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் தெரியாத நபர்களின் தொல்லை அழைப்புகளில் இருந்து விடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த புதிய அம்சம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சைலன்ஸ் அன்னௌவ் கோலர்ஸ் என்கிற இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு வரும் தெரியாத இன்கம்மிங் அழைப்புகளை சைலண்ட் மோடில் வைக்கிறது. இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்வதன் மூலம் ரிங்க்டோன் ஒலி ஒலிக்காது. அதாவது பயனர்களின் கான்டெக்ட் பட்டியலில் இல்லாத எண்களில் இருந்து வரும் அனைத்து அழைப்புகளும் சைலண்ட் மோடில் இருக்கும். அதே நேரத்தில் இந்த அழைப்புகள் நோட்டிபிகேஷனில் டிஸ்பிளே ஆகும்.

பயனர்கள் இதை ஆக்டிவேட் செய்ய செட்டிங்ஸ் , பிரைவசி , கால்ஸ் , சைலன்ஸ் அன்னௌவ் கோலர்ஸ் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இதை பயன்படுத்த முடியும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் பயனர்களுக்கு வேண்டாத தொல்லை அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்