வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில், மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ.288.06 முதல் ரூ.291.96 ஆகவும், விற்பனை விலை ரூ. 305.11 முதல் ரூ. 309.23 ஆகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 288.02 முதல் ரூ. 294.94 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 303 முதல் ரூ. 310 ஆகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 290 முதல் ரூ.295 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 302 முதல் ரூ.  310 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்