யாழில் வாகன திருத்தகம் மீது வெடிகுண்டு வீச்சு தாக்குதல்

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத சிலர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு ஒன்றினை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன திருத்தகத்தில் தரித்துநின்ற கார் ஒன்றின் மீது குறித்த வெடிகுண்டு வீழ்ந்து வெடித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது குறித்த வெடி குண்டு உள்ளூர் தயாரிப்பாக இருக்கலாம் என்றும், அது பெரியளவிலான சேதங்களை விளைவிக்க கூடியது அல்ல என்றும் தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்