முதலைக் கடிக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

வவுனியா மாவட்டம் உலுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பாவற்குளம் பகுதியை சேர்ந்த 67 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கால்நடைகளுடன் பயணித்தபோது கால்வாயில் வைத்து முதலை கடித்து உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்