மின்னல் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு

நாவலப்பிட்டி பிரதேசத்தில் 4 மாடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளன.

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய மழை காரணத்தினால் மின்னல் தாக்கி மாடுகள் உயிரிழந்துள்ளன என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த மாடுகளின் பெறுமதி எட்டு இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை மின்னல் தாக்கிய இடத்தில் பாரிய குழி ஏற்பட்டுள்ளது மேலும் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்