இலங்கைக்கு அவரச நிவாரண உதவியாக 2 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் நாடு மிக மோசமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
இந்த தருணத்தில் அமெரிக்கா இலங்கையுடன் துணை நிற்பதாகவும் அவர் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.