மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 17 பேர் பாதிப்பு
-யாழ் நிருபர்-
நாட்டில் இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 5 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/14 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/165 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும், ஜே/178 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் இரண்டும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/144 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரும், ஜே/147 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்