மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிட வருவதை தவிர்க்குமாறு கோரிக்கை

மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்குக் கண்டிக்கு வருவதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

குறித்த கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக வரிசையில் காத்திருந்த பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்தார்.

அவருக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமையை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். அத்துடன் மேலும் சிலர் வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வழிபாடுகளுக்காகப் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளமையினால் மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு வருவதனை தவிர்க்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

ஏற்கனவே, அதிகளவான மக்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் பொலிஸார் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க