![](https://minnal24.com/wp-content/uploads/2025/01/Copy-of-Untitled-6.png)
மருமகளை வன்கொடுமை செய்த மாமா கைது
மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுரேகெட்டிய தலாவ பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மாமாவை மொனராகலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நான்கு வருடங்களாக சிறுமியின் வீட்டில் வசித்து வருவதாகவும், தனது தாயும் சகோதரியும் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது மாமா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தாயிடம் கூறியதையடுத்து தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொனராகலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.சர்மிந்த சஞ்சீவ மற்றும் அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்