மனநலம் குன்றிய நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பையா சிவனேஷ்வரன் (வயது 42) என்பவரே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த மனநலம் குன்றிய ஒருவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்,  உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்