மட்டக்களப்பு , அம்பாறையில் சுனாமி : வதந்தி நம்ப வேண்டாம்
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில பகுதிகளில் கடல் உள்வாங்கியதை அடுத்து சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என, அம்பாறை மாவட்ட செயலகத்தின் மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தின் துணை இயக்குநர் எம்.ஏ.சி.எம் ரீயாஸ் எமது மின்னல்24 இணையதளத்திற்கு தெரிவித்தார்.
மேலும் சுனாமி அனர்த்தம் ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனையும் தெரிவித்துள்ளார்.
இதை தவிர்த்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அனார்த்தம் ஒன்று இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பின், இதுதொடர்பாக பொறுப்பு வாய்ந்து ஊடகங்களில் தேவையான விழிப்பூட்டல்கள் மக்களுக்கு முன்கூட்டியே விடுக்கப்படும் எனவும் ரீயாஸ் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்