மட்டக்களப்பில் வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன!
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு பேருந்துகளில் கொண்டு செல்லும் பணிகள் இன்று புதன் கிழமை ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதுடன்இ இதில் கல்குடா தொகுதியில் 123 வாக்களிப்பு நிலையங்களும் மட்டக்களப்பு தொகுதியில் 197 வாக்களிப்பு நிலையங்களும் பட்டிருப்புத் தொகுதியில் 122 வாக்களிப்பு நிலையங்களும் நிறுவப்படவுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் சட்டத்தரணி எம்.பீ.எம்.சுபியான் தெரிவித்தார்.
மேலும்’ மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் 46 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளது.
அதில் சாதாரண வாக்குகளை எண்ணுவதற்காக 37 வாக்கெண்ணும் நிலையங்களும் தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 9 வாக்கெண்ணும் நிலையங்களும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இதேவேளை தேர்தல் கடமைகளுக்காக 300 இற்கும் அதிகமான வாகனங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதில் தனியார் பேருந்துகள்இ அரச வாகனங்கள்இ தனியாருக்கு சொந்தமான வேன்கள் போன்றவை பயன்படுத்தப்படவுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்