மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி ஒப்புக்கொடுப்பு

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் வகையில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புனித மரியாள் பேராலயத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் போது அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டதுடன், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஈஸ்டர் ஆராதனை வழிபாடுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க