மகனின் மரண செய்தி கேட்டு உயிரிழந்த தாய்
-யாழ் நிருபர்-
மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாயாரும் உயிரிழந்துள்ளார்
கடந்த 1ஆம் திகதி வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் 2 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அவரது மரண செய்தியை கிளிநொச்சியில் வசிக்கும் தாயார் இராசரட்ணம் வீரம்மா (வயது 82) அதிர்ச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.இருவரதும் மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்