போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
கம்பஹா – மினுவாங்கொட வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களின் அப்படையில் இந்த சுற்றிவளைப்ப மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 5000 ரூபா 25 போலி நாணயத்தாள்களும், 90 போலி கொரிய நாணயத்தாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்