போலி செய்தி குறித்து எச்சரிக்கை
“ஜனாதிபதி பிரதானய” என்ற தலைப்பில் அரசாங்க உதவித் திட்டத்தைப் பற்றிய ஒரு போலி செய்தி அதன் பாதுகாப்பற்ற மோசடி லிங்குடன், தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் எந்தவொரு தீர்மானமும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஊடக சந்திப்புகள் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சமூக ஊடக பயனர்கள் இதுபோன்ற தவறான தகவல்களைப் பகிர்வதை நிறுத்துமாறும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்