பேரவாவியில் உயிரிழந்த வாத்துகள் : வாவியில் தெளிக்கப்பட்ட திரவம் காரணமா?

கொழும்பு பேரவாவியில் இருந்த வாத்துகள் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த வாத்துகள் பறவைக்காய்ச்சலால் உயிரிழக்கவில்லை, என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை வைத்திய அதிகாரி மொஹமட் இஜாஸ் தெரிவித்துள்ளார்.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத்திணைக்களத்தின் பிரேதப் பரிசோதனை பிரிவுகள் நடத்திய விசாரணையில் குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

கொழும்பு பேரவாவியில் இருந்து உயிரிழந்த நிலையில் 13 வாத்துகளின் உடல்கள் மீட்கப்பட்டதாகக் காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் வைத்தியர் நிமல சாந்த விஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பேரவாவியில் துர்நாற்றம் வீசியதாக கொழும்பு மாநகர சபையின் துப்புரவு பணியாளர்கள் கூறியதுடன், அங்கு தெளிக்கப்பட்ட திரவம் ஒன்றினால் குறித்த வாத்துகள் உயிரிழந்திருக்கக் கூடும் என முன்னதாக சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த 5 நாட்களில் பேரவாவியை சுத்திகரிப்பதற்காக மாநகர சபை பணியாளர்களால் குறித்த திரவம் தெளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க