பிரேசிலில் கோர விபத்து: 38 பேர் உயிரிழப்பு
பிரேசில் நாட்டின் தியொபிலோ ஒடானி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மினஸ் கரேஸ் மாகாணத்தில் இருந்து நேற்று மாலை செல் போலோ நகர் நோக்கி 45 பயணிகளுடன் பேருந்து ஒன்று பயணித்துள்ளது. இதன் போது பேருந்தின் ரயர் திடீரென வெடித்ததில் பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே பயணித்த லொறி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதேவேளை விபத்தில் உயிர் இழந்த 38 பயணிகளின் குடும்பத்தினருக்கும் பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா, இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்