பட்டா வாகனத்துடன் மோதிய வேன்: 4 பேர் காயம்

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனத்தின் பின் பகுதியில் வேன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காயமடைந்த 4 பேரும் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க