நட்சத்திர ஹோட்டல்களுக்கு புதிய மதுபான அனுமதி பத்திரங்களை வழங்க நடவடிக்கை

எதிர்காலத்தில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்காக புதிய மதுபான அனுமதி பத்திரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக சுற்றுலா சபையின் அனுமதி மற்றும் மதுவரி நிபந்தனைகளுக்கமைய ஏனைய தரவுகள் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக நிதி அமைச்சரின் அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்