தேர்தல் தொடர்பான அவதானிப்புகளுக்கு அறிவூட்டும் செயலமர்வு

22

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

வியூவ் எனப்படும் தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி அமைப்பின் தேர்தல் கால அவதானிப்புக்கள் தொடர்பான அறிவூட்டும் செயலமர்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

“நம்முடைய வாக்கு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப் பொருளில் வியூவ் அமைப்பின் பணிப்பாளரும் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரியவினால் தேர்தல் கால நடவடிக்கைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்திலிருந்து தேர்தல்கள் உதவி ஆணையாளர் எம்.பி.எம். சுபியான் வொய்ஸ் ஒப் ரைட் (Voice of Right) அமைப்பின் பணிப்பாளர் அருள்நாயகம் தர்ஷிக்கா, இளைஞர் சேவைகள் மன்ற முன்னாள் அதிகாரி ஹமீர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் நொவெம்பெர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை அமைதியாகவும் சிறப்பாகவும் சுதந்திரமானதாகவும் நீதியானதாகவும் நடத்துவற்குரிய அனைத்து முயற்சிகளையும் அனைவரும் எடுக்க வேண்டும். அதற்காக, தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி “வியூவ்” நிறுவனம் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பையும் விழிப்புணர்வையும் மேற்கொண்டு வருவதின் தொடர் நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் இத்தகைய தெளிவூட்டல்கள்; இடம்பெறுகின்றன” என மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath