தேயிலையுடன் பயணித்த டிப்பர் விபத்து: மூவர் காயம்

ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள நோர்வூட் சென் ஜோண்டிலரி பகுதியில் நேற்று பி.ப 3.30 மணியளவில் தேயிலை ஏற்றிப் பயணித்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

வாகனத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாகவே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த மூவரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க