திருகோணமலையில் பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்களது ஆளணி பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யுமாறு கடந்த 2016ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் இதுவரை காலமும் குறித்த பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவில்லை என தெரிவித்து சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்களை எழுப்பியவாறு, பதாகைகளை ஏந்திய வண்ணம்
ஆளணி பற்றாக்குறையின் காரணமாக தாம் பலத்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிட்டுள்ளதுடன் பல வகைகளில் தாம் சிரமப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு குறித்த பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுத்தராவிடின் தாம் பாரிய போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிற்றூழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்