தண்ணீரில் இயங்கும் ரயில்கள்
தண்ணீரில் இயங்கும் ஹைட்ரஜன் ரயிலை உருவாக்க இந்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
இதற்கான பணிகள் எல்லாம் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய ரயில்வே நிர்வாகத்தின் அடுத்த மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என பேசப்படுகிறது.
இந்த ரயில்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 40,000 லீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது, மேலும் இந்த இயக்கத்திற்கு ஆதரவாக சிறப்பு நீர் சேமிப்பு வசதிகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் ரயில் பைலட் திட்டத்தை 2024 டிசம்பரில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹைட்ரஜனில் இயங்கும் 35 ரயில்களைகளை நாடு முழுவதும் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்