
ஜா – எலயில் கோடாவுடன் ஒருவர் கைது
ஜா – எல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா – எல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா – எல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2,939 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா – எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்