சீனாவில் பலத்த மழை: 3 பேர் பலி

சீனாவில் அதிக சனத்தொகையை கொண்ட மாகாணத்தில் குவாங்டாங்
பெய்து வரும் பலத்த மழையினால் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அப்பகுதியிலிருந்து சுமார் 60,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வௌ்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் உயர்வடைவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்