சிசுவை பொலித்தீனில் சுற்றி வீசிய இலங்கை பணிப்பெண்
மாலைதீவில், சிசுவொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் ரகசியமாக சிசுவொன்றை பிரசவித்து, அந்த சிசுவை பையொன்றினுள் இட்டு, கைவிட்டுச் சென்ற நிலையில் மாலைதீவு பொலிஸாரால் குறித்த சிசு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்திய போது வைத்தியர்கள், குறித்த சிசு உயிரிழந்திருந்ததை உறுதிசெய்துள்ளனர்.
இந்தநிலையில், சந்தேகநபரான குறித்த பெண், இலங்கைக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது, மாலைத்தீவு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்